• Oct 18 2024

வடக்கு பெண்களின் பிரச்சினைகளிற்காக தெற்கு மக்களும் குரல் கொடுப்போம்- சுபாஷினி தீபா கருத்து! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 5:18 pm
image

Advertisement

ஒரு நாடு அல்லது ஒரு சமூகம் எந்தளவு பெண்களை அங்கீகாரம் செய்யுமோ அந்தளவிற்கு அந்த நாடு அல்லது குறித்த சமூகம் முன்னேற்றமடையும் எனவும் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறும்  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நீர் கொழும்பு இணைப்பாளரரும் சிறீ விமுத்தி  மீனவ பெண்கள் அமைப்பின் இணைப்பாளருமான சுபாஷினி தீபா கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்றைய தினம் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வடமாகாண பெண்கள் குரல் என்பது தேசிய மீனவ இயக்கத்தின் இணை அமைப்பாக  செயற்பட்டு வருகின்றது. 

 வடமாகாணத்தில் காணப்படுகின்ற 3 முக்கிய பிரைச்சினைகள் தொடர்பாக  கடந்தகாலத்தில் விசேடமாக ஆய்வினை முன்னெடுத்திருந்தோம்.

அதில் வாழ்வாதாரம், குடும்ப தலைமைதுவ பெண்களின் பிரைச்சினைகள் மற்றும் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் என்பனவே உள்ளடங்குகின்றன. 

இந்த ஆய்வினுடாக பெண்கள் பலதரப்பட்ட பிரைச்சினைகளை சந்திப்பதை  அறிந்தமைக்கு  அமைவாக 

இலங்கையில் 52 சதவிகிதமான பெண்கள் இருந்தாலும் அவர்களுடைய பிரைச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்துவது அனைத்து துறைகளிலும் குறைவாக காணப்படுகின்றது. 

மீனவம், விவசாயம் போன்ற பலதரப்பட்ட துறைகளில் மொத்த தேசிய உற்பத்தியில் ஆணைப்  போன்றே பெண்ணும் பங்களிப்பு செய்தாலும் பெண் இன்றும் பின்தள்ளப்பட்டே காணப்படுகின்றாள். 

ஆகவே சமூக,பொருளாதார, அரசியல் கலாசார ரீதியாக பெண்களின் வாழ்கை மேம்படுத்தப்படுத்தல்  வேண்டும். 

அத்துடன் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்டுள்ள பெண்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், பெண்களின் வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்படுவதுடன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் பிரைஜைகள் என்ற ரீதியில் தீர்க்கப்படாமல் உள்ளது. 

வடமாகாணத்தில் தனித்தே பெண்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கின்றனர். இனி வரும் காலங்களில் தெற்கிலுள்ள மக்களும் இணைந்து அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


வடக்கு பெண்களின் பிரச்சினைகளிற்காக தெற்கு மக்களும் குரல் கொடுப்போம்- சுபாஷினி தீபா கருத்து samugammedia ஒரு நாடு அல்லது ஒரு சமூகம் எந்தளவு பெண்களை அங்கீகாரம் செய்யுமோ அந்தளவிற்கு அந்த நாடு அல்லது குறித்த சமூகம் முன்னேற்றமடையும் எனவும் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறும்  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நீர் கொழும்பு இணைப்பாளரரும் சிறீ விமுத்தி  மீனவ பெண்கள் அமைப்பின் இணைப்பாளருமான சுபாஷினி தீபா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வடமாகாண பெண்கள் குரல் என்பது தேசிய மீனவ இயக்கத்தின் இணை அமைப்பாக  செயற்பட்டு வருகின்றது.  வடமாகாணத்தில் காணப்படுகின்ற 3 முக்கிய பிரைச்சினைகள் தொடர்பாக  கடந்தகாலத்தில் விசேடமாக ஆய்வினை முன்னெடுத்திருந்தோம்.அதில் வாழ்வாதாரம், குடும்ப தலைமைதுவ பெண்களின் பிரைச்சினைகள் மற்றும் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் என்பனவே உள்ளடங்குகின்றன. இந்த ஆய்வினுடாக பெண்கள் பலதரப்பட்ட பிரைச்சினைகளை சந்திப்பதை  அறிந்தமைக்கு  அமைவாக இலங்கையில் 52 சதவிகிதமான பெண்கள் இருந்தாலும் அவர்களுடைய பிரைச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்துவது அனைத்து துறைகளிலும் குறைவாக காணப்படுகின்றது. மீனவம், விவசாயம் போன்ற பலதரப்பட்ட துறைகளில் மொத்த தேசிய உற்பத்தியில் ஆணைப்  போன்றே பெண்ணும் பங்களிப்பு செய்தாலும் பெண் இன்றும் பின்தள்ளப்பட்டே காணப்படுகின்றாள். ஆகவே சமூக,பொருளாதார, அரசியல் கலாசார ரீதியாக பெண்களின் வாழ்கை மேம்படுத்தப்படுத்தல்  வேண்டும். அத்துடன் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்டுள்ள பெண்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், பெண்களின் வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்படுவதுடன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் பிரைஜைகள் என்ற ரீதியில் தீர்க்கப்படாமல் உள்ளது. வடமாகாணத்தில் தனித்தே பெண்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கின்றனர். இனி வரும் காலங்களில் தெற்கிலுள்ள மக்களும் இணைந்து அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement