• May 20 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மீது மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே பரந்த கருத்து பரிமாற்றம் தேவை- ஜூலி சுங்! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 4:28 pm
image

Advertisement

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரம் அல்லது அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை கட்டுப்படுத்த கூடாதெனவும் குறிப்பாக சிவில் சமூகத்தினர், கல்வியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு எடுத்துரைத்திருந்ததாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாத பிரச்சினைகள் குறித்து விவாதித்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த எதிர்ப்பு சட்டமூலத்தின் மீது மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே பரந்த கருத்து பரிமாற்றம் தேவை என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்த புதிய சட்டம் ஒரு பயனுள்ள கருவியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மீது மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே பரந்த கருத்து பரிமாற்றம் தேவை- ஜூலி சுங் samugammedia பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரம் அல்லது அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை கட்டுப்படுத்த கூடாதெனவும் குறிப்பாக சிவில் சமூகத்தினர், கல்வியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலின் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு எடுத்துரைத்திருந்ததாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாத பிரச்சினைகள் குறித்து விவாதித்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த எதிர்ப்பு சட்டமூலத்தின் மீது மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே பரந்த கருத்து பரிமாற்றம் தேவை என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார்.பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்த புதிய சட்டம் ஒரு பயனுள்ள கருவியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement