நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வலுவான எதிர்க்கட்சி கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் பி.பெரேரா, அனுராதா ஜெயரத்னே, சாணக்கியன், மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டும்; சஜித் வலியுறுத்து. நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வலுவான எதிர்க்கட்சி கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் பி.பெரேரா, அனுராதா ஜெயரத்னே, சாணக்கியன், மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.