• Oct 02 2024

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் - வஜிர அபேவர்தன வலியுறுத்தல்..!samugammedia

mathuri / Dec 29th 2023, 11:13 am
image

Advertisement

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் இலங்கை மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவு மீண்டும் தங்களின் எதிர்காலபிள்ளைகளுக்கு ஏற்படலாம்  இருப்பதற்கும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட கட்சி காரியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

வங்குராேத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஒருவருடமும் 6மாதங்கள் ஆகும்போது இந்த வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகியுள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது பிரதான விடயமாக இருப்பது ஜனாதிபதி தேர்தல் எப்போது நடத்துவது என்பதாகும்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கப்போவதாக பலரும் தெரிவித்திருக்கின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்வந்திருக்கும் வேட்பாளர்களுக்கு நாடொன்றை நிர்வகிக்க முடியுமா அல்லது இந்த வேட்பாளர்களுக்கு உலக தலைவர்களை சமாளித்துக்கொண்டு இலங்கையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை மக்கள்  நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும்.

இதேவேளை, அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டு ஜனாதிபதியால் செயற்பட முடியாது. என்றாலும் நாங்கள் மீண்டும் எரிபொருள் வரிசைக்கு, எரிவாயு வரிசைக்கு செல்வதா?,  நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதா?, அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது மேற்கொண்டிருக்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை அடுத்துவரும் 12 வருடங்களுக்காவது தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுப்பதா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் - வஜிர அபேவர்தன வலியுறுத்தல்.samugammedia அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் இலங்கை மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரழிவு மீண்டும் தங்களின் எதிர்காலபிள்ளைகளுக்கு ஏற்படலாம்  இருப்பதற்கும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட கட்சி காரியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வங்குராேத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஒருவருடமும் 6மாதங்கள் ஆகும்போது இந்த வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகியுள்ளது.இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது பிரதான விடயமாக இருப்பது ஜனாதிபதி தேர்தல் எப்போது நடத்துவது என்பதாகும்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கப்போவதாக பலரும் தெரிவித்திருக்கின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்வந்திருக்கும் வேட்பாளர்களுக்கு நாடொன்றை நிர்வகிக்க முடியுமா அல்லது இந்த வேட்பாளர்களுக்கு உலக தலைவர்களை சமாளித்துக்கொண்டு இலங்கையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை மக்கள்  நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும்.இதேவேளை, அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டு ஜனாதிபதியால் செயற்பட முடியாது. என்றாலும் நாங்கள் மீண்டும் எரிபொருள் வரிசைக்கு, எரிவாயு வரிசைக்கு செல்வதா,  நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதா, அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது மேற்கொண்டிருக்கும் தேசிய கொள்கை கட்டமைப்பை அடுத்துவரும் 12 வருடங்களுக்காவது தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுப்பதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement