பிக்குணி ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு (02) வத்தளை பொலிஸ் நிலையத்தின் கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகே இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் பிக்குணி ஒருவரை மிரட்டியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பிக்குணியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்குனியை நடு வீதியில் வைத்து ஆபாசமாக பேசிய நபர்கள்; வெளியாகிய அதிர்ச்சி காட்சி - கைதாகிய சந்தேகநபர்கள் பிக்குணி ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு (02) வத்தளை பொலிஸ் நிலையத்தின் கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகே இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் பிக்குணி ஒருவரை மிரட்டியுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் பிக்குணியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.