• Jan 24 2025

பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்கள்!

Tharmini / Nov 17th 2024, 10:21 am
image

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்' என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தியது. 

இது குறித்து பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இங்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.

40 சதவீதம் பாகிஸ்தானியர்கள் இடம்பெயர விரும்புகிறார்கள். குறிப்பாக, பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பேர் இடம்பெயர விரும்புகிறார்கள்.

எகிப்து, லிபியா மற்றும் துபாய் வழியே மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சமூக பாதுாப்பு இல்லாதது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவை மக்கள் இடம்பெயர விரும்புவதற்கு காரணம். 

கடுமையான சிரமங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், சட்டவிரோத இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் 40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்' என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தியது. இது குறித்து பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இங்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.40 சதவீதம் பாகிஸ்தானியர்கள் இடம்பெயர விரும்புகிறார்கள். குறிப்பாக, பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பேர் இடம்பெயர விரும்புகிறார்கள்.எகிப்து, லிபியா மற்றும் துபாய் வழியே மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.சமூக பாதுாப்பு இல்லாதது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவை மக்கள் இடம்பெயர விரும்புவதற்கு காரணம். கடுமையான சிரமங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், சட்டவிரோத இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement