• Nov 23 2024

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்- முன்னாள் போராளி இன்பராஜா கருத்து..!

Sharmi / Oct 9th 2024, 1:20 pm
image

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்பு மனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு இன்றையதினம்(09) தாக்கல் செய்தது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சைகுழுவில் போட்டியிடுகின்றது. 

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்தது.  

இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த க.இன்பராஜா,

நாங்கள் போராளிகள் மாற்றத்தினை கொண்டுவருவதற்காக களம் இறங்கியுள்ளோம்.

இன்று மக்களும் போராளிகளும் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்குள் முரண்பட்டு சண்டையிட்டுக்கொண்ட அரசியல்வாதிகள், தேர்தலுக்காக புத்தில் இருந்து ஈசல் வருவதுபோல வருகின்றனர்.அத்துடன் இளையவர்களுக்கும் புலிகளுக்கும் வாய்ப்பை கொடுக்காமல் நரிகள் எல்லாம் வெளியே வருகின்றனர். ஆனால் நரிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்- முன்னாள் போராளி இன்பராஜா கருத்து. வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்பு மனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு இன்றையதினம்(09) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சைகுழுவில் போட்டியிடுகின்றது. இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்தது.  இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த க.இன்பராஜா,நாங்கள் போராளிகள் மாற்றத்தினை கொண்டுவருவதற்காக களம் இறங்கியுள்ளோம். இன்று மக்களும் போராளிகளும் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.தங்களுக்குள் முரண்பட்டு சண்டையிட்டுக்கொண்ட அரசியல்வாதிகள், தேர்தலுக்காக புத்தில் இருந்து ஈசல் வருவதுபோல வருகின்றனர்.அத்துடன் இளையவர்களுக்கும் புலிகளுக்கும் வாய்ப்பை கொடுக்காமல் நரிகள் எல்லாம் வெளியே வருகின்றனர். ஆனால் நரிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement