• Jan 23 2025

மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்து..!

Sharmi / Jan 17th 2025, 1:53 pm
image

மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  இன்றையதினம் (17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பதில் அமைச்சரும்  திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றது. 

இதில் வெருகல் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

குறிப்பாக மனித-யானை மோதல், தொல்பொருள் திணைக்களம் ஊடான மக்கள் காணி அபகரிப்பு என பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இன,மத, மொழி  வேறுபாடின்றி தொல்பொருள் பிரச்சினையும் இங்கு இருக்க கூடாது எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்  இதன்போது எடுத்துரைத்தார்.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப்,  உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் , துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்து. மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  இன்றையதினம் (17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பதில் அமைச்சரும்  திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றது. இதில் வெருகல் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக மனித-யானை மோதல், தொல்பொருள் திணைக்களம் ஊடான மக்கள் காணி அபகரிப்பு என பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இன,மத, மொழி  வேறுபாடின்றி தொல்பொருள் பிரச்சினையும் இங்கு இருக்க கூடாது எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்  இதன்போது எடுத்துரைத்தார்.இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப்,  உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் , துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement