• Jan 08 2025

இலங்கையில் சிக்கிய மனித பாவனைக்குதவாத தேயிலைத் தூள்

Chithra / Jan 7th 2025, 9:37 am
image

 

உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்திலுள்ள தேயிலை களஞ்சியசாலைகளில் மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் நிறைகொண்ட தேயிலை துாள்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதியின்றி இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த கழிவுத் தேயிலை துாள் 426 பொலித்தின் பைகளில் பொதியிடப்பட்டிருந்துள்ளது.


கம்பளை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நளின் உதாரம்பவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த களஞ்சியசாலைகளில் சோதனையிடப்பட்டுள்ளது.

தவுலகல, வெலம்பொட, வடதெனிய, ஹன்டெஸ்ஸ, லீமகஹகொடுவ, பூவலிகட உள்ளிட்ட உடுநுவர பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பல வருடங்களாக இந்த கழிவு தேயிலை வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சிலோன் டீயின் பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவு தேயிலையை கொண்டு வந்து சீனி, தேன், சாம்பல், சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்தி கறுப்பு தேயிலை தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைக்கு விற்கப்படுகின்றது. 

இந்த தேயிலை கையிருப்புடன் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இலங்கையில் சிக்கிய மனித பாவனைக்குதவாத தேயிலைத் தூள்  உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்திலுள்ள தேயிலை களஞ்சியசாலைகளில் மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் நிறைகொண்ட தேயிலை துாள்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளது.அனுமதியின்றி இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த கழிவுத் தேயிலை துாள் 426 பொலித்தின் பைகளில் பொதியிடப்பட்டிருந்துள்ளது.கம்பளை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நளின் உதாரம்பவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த களஞ்சியசாலைகளில் சோதனையிடப்பட்டுள்ளது.தவுலகல, வெலம்பொட, வடதெனிய, ஹன்டெஸ்ஸ, லீமகஹகொடுவ, பூவலிகட உள்ளிட்ட உடுநுவர பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பல வருடங்களாக இந்த கழிவு தேயிலை வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சிலோன் டீயின் பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவு தேயிலையை கொண்டு வந்து சீனி, தேன், சாம்பல், சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்தி கறுப்பு தேயிலை தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைக்கு விற்கப்படுகின்றது. இந்த தேயிலை கையிருப்புடன் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement