• Nov 05 2024

மக்களின் வெற்றியே எங்களின் வெற்றி மக்களுக்கான அரசியலே எங்களுடைய அரசியல் - சந்திரகுமார்

Tharmini / Nov 5th 2024, 11:13 am
image

Advertisement

சொந்த நிலத்தில் ஒருவர் வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உழைக்க வேண்டும். உண்மையில் அப்படிச் செய்வதே தேசியப் பணியாகும்.

அதுவே தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடியாகும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார்.

கிளிநொச்சி, உதயநகரில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

யாரைத் தெரிவு செய்வது என்று கேட்கிறார்கள். நாங்கள் சொல்கிறோம், மக்களாகிய நீங்கள் உங்களுக்கே வாக்களியுங்கள் என்று. ஆம், உங்களுக்காக என்றால், நீங்கள் வெற்றியடைவதற்காக உங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றே அர்த்தமாகும்.

கடந்த காலத்தில் நீங்கள் தெளிவாகச் சிந்திக்க மறந்ததால்தான், அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்தபடியால்தான் தவறானவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது.

தவறானவர்களின் கைகளில் அரசியல் அதிகாரம் சென்றால், அது தவறான விளைவுகளையே உருவாக்கும். அதுதான் இன்று நடந்திருக்கிறது.

இப்பொழுது தென்னிலங்கை  மக்கள் – சிங்கள மக்கள் – அந்தத் தவறைத் திருத்திக் கொள்வதற்குத் தயாராகி விட்டார்கள். அதனால் அங்கே புதியதொரு

அரசியல் சூழல் உருவாகியிருக்கிறது. ஊழலற்ற, மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல்வாதிகளை மக்கள் வெற்றிபெற வைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் மாற்றம் நிகழ வேண்டும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்காதவர்களை மக்கள் விரட்டவேண்டும். மக்களுடைய போராட்டத்தையும் போராளிகளின் தியாகங்களையும் வைத்து அரசியற்

பிழைப்பு நடத்துவோரைக் கலைக்க வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தர முடியாதவர்கள் எதற்காக? மக்களுடைய தேவைகள் என்ன என்று தெரியாதவர்கள் எதற்காக?

நாம் கடந்த காலத்தில் போரினால் அழிந்து போயிருந்த கிளிநொச்சியைக் கட்டியெழுப்பியிருக்கிறோம். மக்களின் மனதிலே நிலைத்திருக்கக் கூடிய பலபணிகளை ஆற்றியிருக்கிறோம்.

இன்று வடக்கிலே – வவுனியாவுக்கு அப்பால் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் அதிகூடியோர் வேலை செய்யும் ஒரு தொழிற்சாலைகிளிநொச்சியில் மட்டும்தான் உள்ளது. அந்தத் தொழிற்சாலையிலே 6000 பேர் வேலை செய்கிறார்கள். ஆம், 6000 பேர் வேலை செய்யக் கூடிய வேறு ஒரு

தொழிற்சாலையை வேறு எங்காவது யாராவது காட்ட முடியுமா? இப்ப ஆண்டுக்கொரு தொழிற்சாலையை உருவாக்குவதற்கு முயற்சித்திருந்தால், தமிழ் மக்களின்

பொருளதாரம் முன்னேற்றம் கண்டிருக்கும். எங்கள் நிலத்தை விட்டு மக்கள் வெளியேறிச் செல்லும் நிலை வந்திருக்காது. மக்கள் தொகை குறைந்தால் எங்களுடைய பிரதிநித்துவம் குறைந்து விடும். அதுதான் நடக்கிறது. அதை மாற்றியமைக்கக் கூடியவர்கள் இங்கில்லை. நாங்கள் மக்களை முன்னேற்ற

முயற்சிக்கிறோம். எங்கள் மண்ணை வளப்படுத்துவதற்குப் பாடுபடுகிறோம். சொந்த நிலத்தில் ஒருவர் வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். உண்மையில் அப்படிச் செய்வதே தேசியப் பணியாகும். அதுவே தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடியைப் பாதுகாப்பதாக அமையும். எமது மண்ணில் போருக்குப் பிந்திய

அரசியலை யாரும் செய்யவில்லை. அதை நாம் மட்டுமே செய்து வருகிறோம். ஆகவேதான் சொல்கிறோம், எமது வழி தனியான வழி.  அது ஒரு புதிய வழி. மக்களுக்கான வழி. அதுவே சர்வதேச சமூகம் அங்கீகரிக்கின்ற வழி என. அந்த வழியைத் தெரிவு செய்வதும் அதற்கு ஆதரவளிப்பதுமே மக்களுடைய வெற்றிக்கு உதவும்.

அதுவே மக்களுக்கான வெற்றியாகும். ஆகவேதான் மக்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், மக்களுடைய தேவைகளை உணர்ந்தவர்கள் வெற்றியடைய வேண்டும்என்று வலியுறுத்துகிறோம். இந்தத் தேர்தலில் புதிய மாற்றங்களைத் தமிழ் மக்களும் செய்து காட்ட வேண்டும்.

நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஏன் போட்டியிடுகிறோம் என்றால், தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஏற்றுள்ள, தமிழ் மக்களுக்குத் தீர்வுவழங்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரே தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளது. ஆகவேதான் நாமும் மலையக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளுமாக இணைந்து

தமிழ்பேசும் சமூகங்களாக எமது உரிமைகளைக் கேட்கிறோம். இப்படி ஒன்றிணைந்து நின்று குரல் கொடுப்பதும் போராடுவதுமே இன்றைய சூழலில் வெற்றியைத் தரும். ஆகவேதான் நாம் யதார்த்தமான, அறிவுபூர்வமான அரசியலை முன்னெடுக்கிறோம். அது காலத்தின் கட்டாயமாகும. காலப்பொருத்தமற்ற அரசியலை யாராவது செய்தால்

அதனால் மக்களுக்குத்தான் தீமைகள். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்அரசியலை யாரும் செய்யக் கூடாது. அது மாபெரும் குற்றமாகும் என்றார்.



மக்களின் வெற்றியே எங்களின் வெற்றி மக்களுக்கான அரசியலே எங்களுடைய அரசியல் - சந்திரகுமார் சொந்த நிலத்தில் ஒருவர் வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உழைக்க வேண்டும். உண்மையில் அப்படிச் செய்வதே தேசியப் பணியாகும். அதுவே தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடியாகும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார்.கிளிநொச்சி, உதயநகரில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.யாரைத் தெரிவு செய்வது என்று கேட்கிறார்கள். நாங்கள் சொல்கிறோம், மக்களாகிய நீங்கள் உங்களுக்கே வாக்களியுங்கள் என்று. ஆம், உங்களுக்காக என்றால், நீங்கள் வெற்றியடைவதற்காக உங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றே அர்த்தமாகும். கடந்த காலத்தில் நீங்கள் தெளிவாகச் சிந்திக்க மறந்ததால்தான், அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்தபடியால்தான் தவறானவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது.தவறானவர்களின் கைகளில் அரசியல் அதிகாரம் சென்றால், அது தவறான விளைவுகளையே உருவாக்கும். அதுதான் இன்று நடந்திருக்கிறது.இப்பொழுது தென்னிலங்கை  மக்கள் – சிங்கள மக்கள் – அந்தத் தவறைத் திருத்திக் கொள்வதற்குத் தயாராகி விட்டார்கள். அதனால் அங்கே புதியதொருஅரசியல் சூழல் உருவாகியிருக்கிறது. ஊழலற்ற, மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல்வாதிகளை மக்கள் வெற்றிபெற வைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் மாற்றம் நிகழ வேண்டும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்காதவர்களை மக்கள் விரட்டவேண்டும். மக்களுடைய போராட்டத்தையும் போராளிகளின் தியாகங்களையும் வைத்து அரசியற்பிழைப்பு நடத்துவோரைக் கலைக்க வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தர முடியாதவர்கள் எதற்காக மக்களுடைய தேவைகள் என்ன என்று தெரியாதவர்கள் எதற்காகநாம் கடந்த காலத்தில் போரினால் அழிந்து போயிருந்த கிளிநொச்சியைக் கட்டியெழுப்பியிருக்கிறோம். மக்களின் மனதிலே நிலைத்திருக்கக் கூடிய பலபணிகளை ஆற்றியிருக்கிறோம். இன்று வடக்கிலே – வவுனியாவுக்கு அப்பால் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் அதிகூடியோர் வேலை செய்யும் ஒரு தொழிற்சாலைகிளிநொச்சியில் மட்டும்தான் உள்ளது. அந்தத் தொழிற்சாலையிலே 6000 பேர் வேலை செய்கிறார்கள். ஆம், 6000 பேர் வேலை செய்யக் கூடிய வேறு ஒருதொழிற்சாலையை வேறு எங்காவது யாராவது காட்ட முடியுமா இப்ப ஆண்டுக்கொரு தொழிற்சாலையை உருவாக்குவதற்கு முயற்சித்திருந்தால், தமிழ் மக்களின்பொருளதாரம் முன்னேற்றம் கண்டிருக்கும். எங்கள் நிலத்தை விட்டு மக்கள் வெளியேறிச் செல்லும் நிலை வந்திருக்காது. மக்கள் தொகை குறைந்தால் எங்களுடைய பிரதிநித்துவம் குறைந்து விடும். அதுதான் நடக்கிறது. அதை மாற்றியமைக்கக் கூடியவர்கள் இங்கில்லை. நாங்கள் மக்களை முன்னேற்றமுயற்சிக்கிறோம். எங்கள் மண்ணை வளப்படுத்துவதற்குப் பாடுபடுகிறோம். சொந்த நிலத்தில் ஒருவர் வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். உண்மையில் அப்படிச் செய்வதே தேசியப் பணியாகும். அதுவே தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடியைப் பாதுகாப்பதாக அமையும். எமது மண்ணில் போருக்குப் பிந்தியஅரசியலை யாரும் செய்யவில்லை. அதை நாம் மட்டுமே செய்து வருகிறோம். ஆகவேதான் சொல்கிறோம், எமது வழி தனியான வழி.  அது ஒரு புதிய வழி. மக்களுக்கான வழி. அதுவே சர்வதேச சமூகம் அங்கீகரிக்கின்ற வழி என. அந்த வழியைத் தெரிவு செய்வதும் அதற்கு ஆதரவளிப்பதுமே மக்களுடைய வெற்றிக்கு உதவும். அதுவே மக்களுக்கான வெற்றியாகும். ஆகவேதான் மக்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், மக்களுடைய தேவைகளை உணர்ந்தவர்கள் வெற்றியடைய வேண்டும்என்று வலியுறுத்துகிறோம். இந்தத் தேர்தலில் புதிய மாற்றங்களைத் தமிழ் மக்களும் செய்து காட்ட வேண்டும்.நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஏன் போட்டியிடுகிறோம் என்றால், தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஏற்றுள்ள, தமிழ் மக்களுக்குத் தீர்வுவழங்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரே தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளது. ஆகவேதான் நாமும் மலையக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளுமாக இணைந்துதமிழ்பேசும் சமூகங்களாக எமது உரிமைகளைக் கேட்கிறோம். இப்படி ஒன்றிணைந்து நின்று குரல் கொடுப்பதும் போராடுவதுமே இன்றைய சூழலில் வெற்றியைத் தரும். ஆகவேதான் நாம் யதார்த்தமான, அறிவுபூர்வமான அரசியலை முன்னெடுக்கிறோம். அது காலத்தின் கட்டாயமாகும. காலப்பொருத்தமற்ற அரசியலை யாராவது செய்தால்அதனால் மக்களுக்குத்தான் தீமைகள். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்அரசியலை யாரும் செய்யக் கூடாது. அது மாபெரும் குற்றமாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement