யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பிரபல வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான சொக்கிலேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை பொதுச் சுகாதார உத்தியோகத்தரால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக நிலையத்தில் இதேபோன்ற முற்குற்றம் இடம்பெற்றிருந்தமையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிபதி உசைன், குறித்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட பிரதேச சபைக்கும் அறிவிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் அனுமதி இரத்து யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பிரபல வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான சொக்கிலேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை பொதுச் சுகாதார உத்தியோகத்தரால் கண்டறியப்பட்டது.இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக நிலையத்தில் இதேபோன்ற முற்குற்றம் இடம்பெற்றிருந்தமையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிபதி உசைன், குறித்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உத்தரவிட்டார்.அத்துடன், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட பிரதேச சபைக்கும் அறிவிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.