"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்."
- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்வோம். நாங்கள் அனைவரும் கரம் கோர்த்துக்கொண்டு சிநேகபூர்வமான முறையில் அநுர அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம்." - என்றார்.
வடக்கு, கிழக்கில் இருந்து ஆளுமையுள்ளவர்கள் நாடாளுமன்றம் வர வேண்டும்- மனோ தெரிவிப்பு "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்வோம். நாங்கள் அனைவரும் கரம் கோர்த்துக்கொண்டு சிநேகபூர்வமான முறையில் அநுர அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம்." - என்றார்.