• Sep 20 2024

நீதிமன்றத்தில் குவியும் மனுக்கள்.! தேர்தலை நிறுத்துமாறு ஒருதரப்பும்..! நடத்துமாறு மறுதரப்பும் மனு தாக்கல்!

Sharmi / Jan 10th 2023, 11:18 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  
இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி  மனு ஒன்றை ஓய்வு பெற்ற இராணுவ கேர்னல் விஜேசுந்தர தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் எழுத்தாணை மனுவிற்கு அனுமதி வழங்காது அதனை தள்ளுபடி செய்யுமாறு இடையீட்டு மனுக்களை  சட்டத்தரணி சுனில் வட்டகல, போராட்டக்கள செயற்பாட்டாளரான சோசலிச இளையோர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் கலாநிதி விஷாகேச சந்திரசேகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை குறித்த மனுக்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதுடன் அதற்கான வேட்பு மனுக்களும் கோரப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை இடை நிறுத்த வேண்டுமென உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுப்பது, நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் குவியும் மனுக்கள். தேர்தலை நிறுத்துமாறு ஒருதரப்பும். நடத்துமாறு மறுதரப்பும் மனு தாக்கல் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி  மனு ஒன்றை ஓய்வு பெற்ற இராணுவ கேர்னல் விஜேசுந்தர தாக்கல் செய்திருந்தார்.அத்துடன் எழுத்தாணை மனுவிற்கு அனுமதி வழங்காது அதனை தள்ளுபடி செய்யுமாறு இடையீட்டு மனுக்களை  சட்டத்தரணி சுனில் வட்டகல, போராட்டக்கள செயற்பாட்டாளரான சோசலிச இளையோர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் கலாநிதி விஷாகேச சந்திரசேகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.இதேவேளை குறித்த மனுக்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதுடன் அதற்கான வேட்பு மனுக்களும் கோரப்பட்டுள்ளன.இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை இடை நிறுத்த வேண்டுமென உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுப்பது, நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement