• Dec 11 2024

அறுகம்பே மற்றும் டிரம்பை கொல்ல திட்டம்; அமெரிக்காவின் தகவல்கள் குறித்து தீவிர விசாரணை

Chithra / Nov 11th 2024, 12:08 pm
image


அறுகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்து தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அமெரிக்கா தெரிவித்துள்ள தகவல் குறித்தும் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளிற்காக இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்தவர். 

பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் வெளிநாட்டு தூதரகங்களுடன் நிச்சயம் தொடர்பு கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என தெரிவிக்கப்படும் பர்ஹாட் சகேரி என்ற நபர் இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக  தெரிவித்துள்ளார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சியில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வௌியான குற்றச்சாட்டை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி மறுத்துள்ளார்.

எதிரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட இரு நாடுகளுக்குமிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளளுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுப்பதாக ஈரான் வெளிவிவகார மேலும் தெரிவித்துள்ளார்.

தனது 'X' தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அறுகம்பே மற்றும் டிரம்பை கொல்ல திட்டம்; அமெரிக்காவின் தகவல்கள் குறித்து தீவிர விசாரணை அறுகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்து தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அமெரிக்கா தெரிவித்துள்ள தகவல் குறித்தும் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.சந்தேகநபர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளிற்காக இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்தவர். பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் வெளிநாட்டு தூதரகங்களுடன் நிச்சயம் தொடர்பு கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என தெரிவிக்கப்படும் பர்ஹாட் சகேரி என்ற நபர் இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக  தெரிவித்துள்ளார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சியில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வௌியான குற்றச்சாட்டை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி மறுத்துள்ளார்.எதிரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட இரு நாடுகளுக்குமிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளளுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுப்பதாக ஈரான் வெளிவிவகார மேலும் தெரிவித்துள்ளார்.தனது 'X' தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement