• Jan 31 2025

நியாயமான விலையில் உயர்தர மருந்துகளை நாட்டிற்கு வழங்க திட்டம்

Chithra / Jan 29th 2025, 3:13 pm
image


இலங்கையில் நியாயமான விலையில் உயர்தர மற்றும் சிறந்த மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும் விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

நியாயமான விலையில் தரமான உயர்தர மருந்துகளை அரசாங்க மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழுவுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றார்.

நாட்டில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் அரச மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன, மீதமுள்ளவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்றும், அந்த இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளிலிருந்து மருந்து நிறுவனங்கள் மிக அதிக லாபத்தை ஈட்டியுள்ளன தெரியவந்தது.

அத்துடன், நாட்டில் மருந்து மாஃபியா செயல்பட்டு வருவதாகவும் குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

சுகாதாரத் துறையில், தமது தொழில் சார்ந்த அறிவு கொண்ட நபர்களை இந்த இரண்டு குழுக்களின் உறுப்பினர்களாக நியமிப்பதன் மூலம் மருந்துத் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்திய அமைச்சர், புதிய குழு உறுப்பினர்களை இது குறித்து தீவிரமாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.


தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அத்துடன் இனிவரும் காலங்களில்

இந்த இரண்டு குழுக்களும் சட்டத்தை முறையாக அமல்படுத்தி, நாட்டின் அப்பாவி மக்களுக்கு தரமான மருந்துகளை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மருந்துகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தீர்வுகளை வழங்கும் நோக்கில் தேசிய மேன்முறையீட்டு குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் நல்ல நோக்கத்துடன் இதற்கு அனைவரும் பங்களிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நியாயமான விலையில் உயர்தர மருந்துகளை நாட்டிற்கு வழங்க திட்டம் இலங்கையில் நியாயமான விலையில் உயர்தர மற்றும் சிறந்த மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும் விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், நியாயமான விலையில் தரமான உயர்தர மருந்துகளை அரசாங்க மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழுவுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றார்.நாட்டில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் அரச மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன, மீதமுள்ளவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்றும், அந்த இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளிலிருந்து மருந்து நிறுவனங்கள் மிக அதிக லாபத்தை ஈட்டியுள்ளன தெரியவந்தது.அத்துடன், நாட்டில் மருந்து மாஃபியா செயல்பட்டு வருவதாகவும் குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.சுகாதாரத் துறையில், தமது தொழில் சார்ந்த அறிவு கொண்ட நபர்களை இந்த இரண்டு குழுக்களின் உறுப்பினர்களாக நியமிப்பதன் மூலம் மருந்துத் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்திய அமைச்சர், புதிய குழு உறுப்பினர்களை இது குறித்து தீவிரமாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அத்துடன் இனிவரும் காலங்களில்இந்த இரண்டு குழுக்களும் சட்டத்தை முறையாக அமல்படுத்தி, நாட்டின் அப்பாவி மக்களுக்கு தரமான மருந்துகளை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.மருந்துகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தீர்வுகளை வழங்கும் நோக்கில் தேசிய மேன்முறையீட்டு குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் நல்ல நோக்கத்துடன் இதற்கு அனைவரும் பங்களிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement