• Feb 09 2025

Thansita / Feb 8th 2025, 9:05 pm
image

நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

நீர் கட்டணத்தை குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சமர்ப்பித்த முன்மொழிவு  கிடைத்ததாகவும் இது தொடர்பான முன்மொழிவு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

 மேலும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே  கட்டண திருத்தம் குறித்த முடிவை அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

நீர் கட்டணத்தை எதிர்வரும் காலங்களில்  10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தை குறைக்கத் திட்டம் நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  நீர் கட்டணத்தை குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சமர்ப்பித்த முன்மொழிவு  கிடைத்ததாகவும் இது தொடர்பான முன்மொழிவு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். மேலும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே  கட்டண திருத்தம் குறித்த முடிவை அறிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.நீர் கட்டணத்தை எதிர்வரும் காலங்களில்  10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement