• Oct 05 2024

என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள்; பிரிட்டனில் கதறிய தமிழர்!

Tamil nila / Feb 10th 2023, 7:40 pm
image

Advertisement

பிரிட்டனில் கடந்த வருடம் இடம்பெற்ற குதிரை காவலர் படையின் அணிவகுப்பை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழர் ஒருவர் நீதிமன்றத்தில் என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் என சத்தமிட்டுள்ளார்.


கடந்த வருடம் ஏப்பிரல் 18 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திற்கான ஒத்திகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை குதிரை காவலர் படையணியை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழரான பிரசாந் கந்தையா( 30) படையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து மயிரிழையில் தப்பினார்.


இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது கந்தையா எலிமருந்து பொதுமக்களை கொலை செய்யும் நான் பிரிட்டனை வெறுக்கின்றேன் - பொலிஸ் போன்ற விடயங்கள் குறித்து இணையத்தில் பார்வையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


அத்துடன் கடந்த 2019 முதல் அவர் லண்டன் பிரிட்ஜ் பயங்கரவாத தாக்குதல்களை இணையத்தில் பார்வையிட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில்  அண்மையில் நீதிமன்றத்தில் விசாரணை  இடம்பெற்றது. இதன்போது நீதிமன்றத்தில் குதிரை காவல்படையினர் தன்னை சுட்டுக்கொல்வார்கள் என்பதற்காகவே தான் அவர்களை நோக்கி கத்தியுடன் ஓடியதாக தெரிவித்துள்ளார்.


அவர்கள் என்னை சுடவேண்டும் என விரும்பினேன் எனவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.



விசாரணையின் போது அவர் என்னை இலங்கைக்கு செல்லவிடுங்கள் என கூச்சலிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


 

என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள்; பிரிட்டனில் கதறிய தமிழர் பிரிட்டனில் கடந்த வருடம் இடம்பெற்ற குதிரை காவலர் படையின் அணிவகுப்பை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழர் ஒருவர் நீதிமன்றத்தில் என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் என சத்தமிட்டுள்ளார்.கடந்த வருடம் ஏப்பிரல் 18 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திற்கான ஒத்திகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை குதிரை காவலர் படையணியை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழரான பிரசாந் கந்தையா( 30) படையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து மயிரிழையில் தப்பினார்.இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது கந்தையா எலிமருந்து பொதுமக்களை கொலை செய்யும் நான் பிரிட்டனை வெறுக்கின்றேன் - பொலிஸ் போன்ற விடயங்கள் குறித்து இணையத்தில் பார்வையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.அத்துடன் கடந்த 2019 முதல் அவர் லண்டன் பிரிட்ஜ் பயங்கரவாத தாக்குதல்களை இணையத்தில் பார்வையிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில்  அண்மையில் நீதிமன்றத்தில் விசாரணை  இடம்பெற்றது. இதன்போது நீதிமன்றத்தில் குதிரை காவல்படையினர் தன்னை சுட்டுக்கொல்வார்கள் என்பதற்காகவே தான் அவர்களை நோக்கி கத்தியுடன் ஓடியதாக தெரிவித்துள்ளார்.அவர்கள் என்னை சுடவேண்டும் என விரும்பினேன் எனவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.விசாரணையின் போது அவர் என்னை இலங்கைக்கு செல்லவிடுங்கள் என கூச்சலிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement