வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விசேட செயற்பாடொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு உறக்க நிலையை தணிக்க, கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு அம்சம் என வாகன சாரதிகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
இந்நிலையில், கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸாரின் இச் செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கிய கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார். வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விசேட செயற்பாடொன்றினை முன்னெடுத்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு உறக்க நிலையை தணிக்க, கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள்.அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு அம்சம் என வாகன சாரதிகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள். இந்நிலையில், கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸாரின் இச் செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்