• Nov 10 2024

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்பு; முகநூலில் விளம்பரம் செய்து மோசடி! மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / May 29th 2024, 10:44 am
image

 

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களானது இத்தாலி தொடர்பான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கொத்தனார்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போன்ற தொழில் வெற்றிடங்கள் உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, வேலைக்காக வெளிநாடு செல்வது இலவசம் என்றும் மற்றும் மாதச் சம்பளம் மூன்று இலட்சம் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூல் பக்கத்தில் இந்த பதிவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளதுடன் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது முழுக்க முழுக்க மோசடியான வர்த்தகம் எனவும் டென்மார்க் போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான தொழில் வாய்ப்புகள் இதுவரை எமது நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான சூழ்நிலையில் உயர் தொழில் தகைமைகளைக் கொண்டவர்களுக்குக் கூட தொழில் வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்பு; முகநூலில் விளம்பரம் செய்து மோசடி மக்களுக்கு எச்சரிக்கை  டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த தகவல்களானது இத்தாலி தொடர்பான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கொத்தனார்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போன்ற தொழில் வெற்றிடங்கள் உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.அத்தோடு, வேலைக்காக வெளிநாடு செல்வது இலவசம் என்றும் மற்றும் மாதச் சம்பளம் மூன்று இலட்சம் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.முகநூல் பக்கத்தில் இந்த பதிவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளதுடன் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இது முழுக்க முழுக்க மோசடியான வர்த்தகம் எனவும் டென்மார்க் போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான தொழில் வாய்ப்புகள் இதுவரை எமது நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், இவ்வாறான சூழ்நிலையில் உயர் தொழில் தகைமைகளைக் கொண்டவர்களுக்குக் கூட தொழில் வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement