அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது.
எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும்.
உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கு நமது செலவினங்களில் பெரும் சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.
அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கேற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்.
புத்தாண்டில் பாடசாலை தொடங்கும் போது, பாடசாலை மாணவர்களுக்கு, குறிப்பாக அப்பியாச புத்தகங்களுக்கு நிவாரணம் தருவோம் என நம்புகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். என்றார்.
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு புதிய நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி அமரசூரிய தெரிவித்துள்ளார்.அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது.எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும்.உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கு நமது செலவினங்களில் பெரும் சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கேற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்.புத்தாண்டில் பாடசாலை தொடங்கும் போது, பாடசாலை மாணவர்களுக்கு, குறிப்பாக அப்பியாச புத்தகங்களுக்கு நிவாரணம் தருவோம் என நம்புகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். என்றார்.