பருத்தித்துறை நகரசபையால் கட்டப்பட்ட புதிய மரக்கறி சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி சந்தை இன்று முதல் முழுமையாக இயங்க ஆர்மபித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகர சபையால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி சந்தை தொகுதியில் மரக்கறி சந்தை இயங்குவதற்க்கு நகரசபையால் போதிய இடவசதி இன்மை, ஒருவழி பாதை, வாகன தரிப்பிடம் உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்து,
புதிய சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள முடியாதென தெரிவித்து பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் நீதிமன்றில் சில காலம் புதிய கட்டிட தொகுதியில் மரக்கறி சந்தை இயங்குவதற்கு இடைக்கால தடை போடப்பட்டிருந்தது.
பருத்தித்துறை நகர சபை மற்றும் பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் ஆகியோருக்கு இடையில் புதிய மரக்கறி சந்தை தொகுதியில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகளை தீர்ப்பதற்கு நகரசபை இணங்கியிருந்த நிலையில் நேற்று புதிய மரக்கறி சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி வியாபரம் மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் ஒலிபெருக்கி மூலமும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் மரக்கறி வியாபாரிகள் நேற்று மரக்கறி வியாபாரம் செய்யும் நடவடிக்கையிலிருந்து விலகியிருந்த நிலையில்,
நகர சபைக்கும் மரக்கறி வியாபாரிகளுக்குமிடையில் நேற்று பிற்பகலில் இடம் பெற்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் இன்று காலை முதல் புதிய கட்டி தொகுதியில் பருத்தித்துறை மரக்கறி சந்தை இயங்கிவருகின்றது.
எனினும் பழைய கட்டிடத்தில் மரக்கறி சந்தையில் வியாபரம் இடம் பெற்றது போன்று இன்று இடம் பெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பருத்தித்துறை மரக்கறி சந்தை முழுமையாக புதிய கட்டிடத்தில். பருத்தித்துறை நகரசபையால் கட்டப்பட்ட புதிய மரக்கறி சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி சந்தை இன்று முதல் முழுமையாக இயங்க ஆர்மபித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகர சபையால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி சந்தை தொகுதியில் மரக்கறி சந்தை இயங்குவதற்க்கு நகரசபையால் போதிய இடவசதி இன்மை, ஒருவழி பாதை, வாகன தரிப்பிடம் உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்து,புதிய சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள முடியாதென தெரிவித்து பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் நீதிமன்றில் சில காலம் புதிய கட்டிட தொகுதியில் மரக்கறி சந்தை இயங்குவதற்கு இடைக்கால தடை போடப்பட்டிருந்தது.பருத்தித்துறை நகர சபை மற்றும் பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் ஆகியோருக்கு இடையில் புதிய மரக்கறி சந்தை தொகுதியில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகளை தீர்ப்பதற்கு நகரசபை இணங்கியிருந்த நிலையில் நேற்று புதிய மரக்கறி சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி வியாபரம் மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் ஒலிபெருக்கி மூலமும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் மரக்கறி வியாபாரிகள் நேற்று மரக்கறி வியாபாரம் செய்யும் நடவடிக்கையிலிருந்து விலகியிருந்த நிலையில்,நகர சபைக்கும் மரக்கறி வியாபாரிகளுக்குமிடையில் நேற்று பிற்பகலில் இடம் பெற்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் இன்று காலை முதல் புதிய கட்டி தொகுதியில் பருத்தித்துறை மரக்கறி சந்தை இயங்கிவருகின்றது. எனினும் பழைய கட்டிடத்தில் மரக்கறி சந்தையில் வியாபரம் இடம் பெற்றது போன்று இன்று இடம் பெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.