இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று இடம் பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம் தலைமையில் குறித்த நிகழ்வு நல்லூர் இளம்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது யாழ் மாவட்டத்தை சேர்ந்த 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்கள் சார்பிலும் போட்டியிடுபவர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று இடம் பெற்றது.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம் தலைமையில் குறித்த நிகழ்வு நல்லூர் இளம்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது யாழ் மாவட்டத்தை சேர்ந்த 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்கள் சார்பிலும் போட்டியிடுபவர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டனர்.