• Nov 29 2024

வானிலை நிலைமைகள் தொடர்பில் வரைபடங்களின் உதவியோடு சுட்டிக் காட்டுகிறார் - மெரில் மெண்டீஸ்

Tharmini / Nov 28th 2024, 11:53 am
image

இன்றைய வானிலை நிலைமைகள் தொடர்பில் வரைபடங்களின் உதவியோடு சுட்டிக் காட்டுகிறார் இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் (முன்கணிப்பு) துணை இயக்குனர் மெரில் மெண்டீஸ்.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலை கொண்ட தாழமுக்கமானது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு நோக்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அத்தோடு எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இந்த நிலையானது மெது மெதுவாக விலகிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கும். 

இந்த நிலையால் வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் அவதான நிலை ஏற்பட்டுள்ளது. 

அத்தோடு விசேடமாக வடக்கு, திருகோணமலை, கிழக்கு மாகாண பிரதேசங்களில் மில்லி மீட்டர் 150 க்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். 

அதேபோன்று வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை இன்று (28) எதிர்பார்க்கலாம், மேலும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பலத்த காற்றும் இப்பகுதிகளில் வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு மீனவ நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

அத்தோடு அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த தாழமுக்கம் மற்றும் புயல் நிலையானது எதிர்வரும் 30ம் திகதியளவில் மெதுவாக தென்னிந்தியாவின் தமிழ்நாட்டு பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக் காட்டினார்.



வானிலை நிலைமைகள் தொடர்பில் வரைபடங்களின் உதவியோடு சுட்டிக் காட்டுகிறார் - மெரில் மெண்டீஸ் இன்றைய வானிலை நிலைமைகள் தொடர்பில் வரைபடங்களின் உதவியோடு சுட்டிக் காட்டுகிறார் இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் (முன்கணிப்பு) துணை இயக்குனர் மெரில் மெண்டீஸ்.வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலை கொண்ட தாழமுக்கமானது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு நோக்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அத்தோடு எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இந்த நிலையானது மெது மெதுவாக விலகிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கும். இந்த நிலையால் வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் அவதான நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு விசேடமாக வடக்கு, திருகோணமலை, கிழக்கு மாகாண பிரதேசங்களில் மில்லி மீட்டர் 150 க்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். அதேபோன்று வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை இன்று (28) எதிர்பார்க்கலாம், மேலும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பலத்த காற்றும் இப்பகுதிகளில் வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஆகவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு மீனவ நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. அத்தோடு அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த தாழமுக்கம் மற்றும் புயல் நிலையானது எதிர்வரும் 30ம் திகதியளவில் மெதுவாக தென்னிந்தியாவின் தமிழ்நாட்டு பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக் காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement