• Nov 17 2024

வடக்கு கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் - கஜேந்திரன் எம்பி சபையில் ஆவேசம்...!

Anaath / Jun 6th 2024, 6:01 pm
image

யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்பி சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நேரத்திலே கடந்த 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 19 ஆம் திகதி  ஒரு இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பொழுது படுகொலை செய்யப்பட்டு  உயிரிழந்திருந்தார். அவருடைய கொலை தொடர்பாக 4 பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் கூட அந்த சித்திர வதைகள் நடைபெற்ற நான்கு நாளும் அந்த வட்டுக்கோட்டை பொலிஸ்  நிலையத்தில்  பொறுப்பதிகாரியாக இருந்த OIC மீது இது வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

நேற்று முன்தினம் பொன்னாலை பகுதியிலே கிருஷ்ணவேணி என்கின்ற ஒரு பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய வளவிலே ஒரு குழாய் கிணறு ஒன்றை அமைத்து கொண்டிருக்கின்ற பொழுது அங்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸ்  நிலைய பொலிசார் அந்த அனுமதி பெறப்படவில்லை என்பதை காரணம் காட்டி அவரிடம் இருந்து 8000 ரூபாய் கப்பத்தை  பெற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த தாயின் மகன் க.பொ.த  உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறார். பாடசாலை கல்வி போக மிகுதி நேரம் போக கூலி வேலை செய்து அதிலே சேமித்த பணத்திலே தான் இந்த குழாய் கிணறு அமைக்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த பணத்தில் தான் 8000 ரூபாயை புடுங்கி சென்றிருக்கிறார்கள். அந்த பொலிசாரினுடைய பெயர்கள் சுமணஸ்ரீ, குமார, மற்றும் க்ஷுன் என்ற மூன்று போலீஸ் உத்தியோகத்தர்கள். இவர்கள் இந்த கப்பத்தை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அடுத்ததாக ஆறுகால் மடத்தை சேர்ந்த கந்தசாமி சேகரன் என்ற மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர் 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 14 ஆம் திகதி காரைநகர் பகுதியிலே கிராம சேவையாளர் அலுவலகம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையிலே நிற்கிறார்  என்ற தகவல் கிராம சேவையாளரால் வட்டுக்கோட்டை பொலிசாரால் கடந்த வருடம் 11 ஆம் மாதம் 18 ஆம் திகதி பொன்னாலை சந்தியிலே பற்றைக்குள்ளிருந்து சிதைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அந்த செய்தியை சேகரிப்பதற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். அந்த கொலை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாரால்  இன்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை. 

அதே போன்று காங்கேசன் துறை விசேட பொலிஸ்  பிரிவை சேர்ந்த (போலீஸ் இலக்கம் 90829) வாளால் பொது மகன் ஒருவரை வெட்டியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக இன்றுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ்  அத்தியட்சகர் கூறுகிறார் அவர் தற்காப்பு நடவடிக்கையாக அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க முற்பட்ட போது தான்  அந்த வாள்வெட்டு நடைபெற்றது என்று சொல்லி. ஆனால் இது அப்பட்டமான பொய் அந்த ஆவணங்கள் நான் இங்கே சபையின் நடவடிக்கைக்காக சமர்பிக்கின்றேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் - கஜேந்திரன் எம்பி சபையில் ஆவேசம். யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்பி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நேரத்திலே கடந்த 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 19 ஆம் திகதி  ஒரு இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பொழுது படுகொலை செய்யப்பட்டு  உயிரிழந்திருந்தார். அவருடைய கொலை தொடர்பாக 4 பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் கூட அந்த சித்திர வதைகள் நடைபெற்ற நான்கு நாளும் அந்த வட்டுக்கோட்டை பொலிஸ்  நிலையத்தில்  பொறுப்பதிகாரியாக இருந்த OIC மீது இது வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நேற்று முன்தினம் பொன்னாலை பகுதியிலே கிருஷ்ணவேணி என்கின்ற ஒரு பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய வளவிலே ஒரு குழாய் கிணறு ஒன்றை அமைத்து கொண்டிருக்கின்ற பொழுது அங்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸ்  நிலைய பொலிசார் அந்த அனுமதி பெறப்படவில்லை என்பதை காரணம் காட்டி அவரிடம் இருந்து 8000 ரூபாய் கப்பத்தை  பெற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த தாயின் மகன் க.பொ.த  உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறார். பாடசாலை கல்வி போக மிகுதி நேரம் போக கூலி வேலை செய்து அதிலே சேமித்த பணத்திலே தான் இந்த குழாய் கிணறு அமைக்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த பணத்தில் தான் 8000 ரூபாயை புடுங்கி சென்றிருக்கிறார்கள். அந்த பொலிசாரினுடைய பெயர்கள் சுமணஸ்ரீ, குமார, மற்றும் க்ஷுன் என்ற மூன்று போலீஸ் உத்தியோகத்தர்கள். இவர்கள் இந்த கப்பத்தை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அடுத்ததாக ஆறுகால் மடத்தை சேர்ந்த கந்தசாமி சேகரன் என்ற மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர் 2023 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 14 ஆம் திகதி காரைநகர் பகுதியிலே கிராம சேவையாளர் அலுவலகம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையிலே நிற்கிறார்  என்ற தகவல் கிராம சேவையாளரால் வட்டுக்கோட்டை பொலிசாரால் கடந்த வருடம் 11 ஆம் மாதம் 18 ஆம் திகதி பொன்னாலை சந்தியிலே பற்றைக்குள்ளிருந்து சிதைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அந்த செய்தியை சேகரிப்பதற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். அந்த கொலை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாரால்  இன்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை. அதே போன்று காங்கேசன் துறை விசேட பொலிஸ்  பிரிவை சேர்ந்த (போலீஸ் இலக்கம் 90829) வாளால் பொது மகன் ஒருவரை வெட்டியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக இன்றுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ்  அத்தியட்சகர் கூறுகிறார் அவர் தற்காப்பு நடவடிக்கையாக அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க முற்பட்ட போது தான்  அந்த வாள்வெட்டு நடைபெற்றது என்று சொல்லி. ஆனால் இது அப்பட்டமான பொய் அந்த ஆவணங்கள் நான் இங்கே சபையின் நடவடிக்கைக்காக சமர்பிக்கின்றேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement