கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,,
உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதாவது கான்ஸ்டபிள் தண்ணீரில் மூழ்கிய போது, அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
பின்னர், அப்பகுதி மக்கள் வந்து கான்ஸ்டபிளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்கள் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்.Samugammedia கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,,உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அதாவது கான்ஸ்டபிள் தண்ணீரில் மூழ்கிய போது, அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.பின்னர், அப்பகுதி மக்கள் வந்து கான்ஸ்டபிளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்தார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.