அதி வேகத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அடையாளம் காண போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 30 வேக துப்பாக்கி சாதனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக, இந்த வேகமானி கருவிகள் நீர்கொழும்பு, களனி மற்றும் கம்பஹா பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரிவு அதிகாரிகளுக்கும் மேற்கு மாகாண போக்குவரத்து தெற்குப் பிரிவின் பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், எதிர்காலத்தில் இந்த வேகமானியை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் போக்குவரத்து தலைமையகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிவேகத்தில் பயணிக்கும் வாகனங்களை அடையாளங்காண பொலிஸாருக்கு புதிய சாதனங்கள் அதி வேகத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அடையாளம் காண போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 30 வேக துப்பாக்கி சாதனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.அதன்படி, முதல் கட்டமாக, இந்த வேகமானி கருவிகள் நீர்கொழும்பு, களனி மற்றும் கம்பஹா பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரிவு அதிகாரிகளுக்கும் மேற்கு மாகாண போக்குவரத்து தெற்குப் பிரிவின் பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்காலத்தில் இந்த வேகமானியை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் போக்குவரத்து தலைமையகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.