• Nov 25 2024

இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்! தாமரை கோபுரத்தில் குழப்பம்

Chithra / Jul 2nd 2024, 11:28 am
image

கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்ற பொலிஸ் அதிகாரியை, கடுமையாக தாக்கி காயப்படுத்திய இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதுடன் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. 

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாமரை கோபுர வளாகத்தில் அருகில் உள்ள நகரப் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், குறித்த நபரைக் கைது செய்ய முயற்சித்த போது, அவரை கடற்படை உறுப்பினர் திட்டியதாகவும், மிக மோசமான நடந்துக் கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அருகில் பணியில் இருந்த மற்றுமொரு அதிகாரி, சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்தது.

இதனையடுத்து 37 வயதான சந்தேக நபர் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் தாமரை கோபுரத்தில் குழப்பம் கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்ற பொலிஸ் அதிகாரியை, கடுமையாக தாக்கி காயப்படுத்திய இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதுடன் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாமரை கோபுர வளாகத்தில் அருகில் உள்ள நகரப் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், குறித்த நபரைக் கைது செய்ய முயற்சித்த போது, அவரை கடற்படை உறுப்பினர் திட்டியதாகவும், மிக மோசமான நடந்துக் கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த நிலையில் அருகில் பணியில் இருந்த மற்றுமொரு அதிகாரி, சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்தது.இதனையடுத்து 37 வயதான சந்தேக நபர் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement