• Sep 20 2024

நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு!samugammedia

Tamil nila / Aug 4th 2023, 7:41 am
image

Advertisement

நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் பலருக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அமைச்சர்களின் பாதுகாப்புப்பிரிவின் சுமார் நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, ஏறக்குறைய 20 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னாள் ஆளுநர்களான ஹேமல் குணசேகர, சரத் ஏக்கநாயக்க, டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் அனுராதா யஹம்பத் ஆகியோர் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும்  கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தாமாக முன்வந்து திருப்பி அனுப்பப்பட்டதாக மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புsamugammedia நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் பலருக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் அமைச்சர்களின் பாதுகாப்புப்பிரிவின் சுமார் நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கமைய, ஏறக்குறைய 20 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.முன்னாள் ஆளுநர்களான ஹேமல் குணசேகர, சரத் ஏக்கநாயக்க, டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் அனுராதா யஹம்பத் ஆகியோர் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இருப்பினும்  கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தாமாக முன்வந்து திருப்பி அனுப்பப்பட்டதாக மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement