• Apr 20 2025

பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை: மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்..!

Sharmi / Apr 18th 2025, 12:32 pm
image

அதுருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கூர்மையான ஆயுதங்களுடன்,T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் 25 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த  சந்தேக நபர் கடந்த 12 ஆம்  திகதி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் 11 கிராம் 1,000 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்(ICE) போதைப்பொருள் இருந்ததாகவும் அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சந்தேக நபர் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளின் போது சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில்  நேற்றையதினம் வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பொலிஸார் மீட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை: மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள். அதுருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கூர்மையான ஆயுதங்களுடன்,T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் 25 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேவேளை குறித்த  சந்தேக நபர் கடந்த 12 ஆம்  திகதி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் 11 கிராம் 1,000 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்(ICE) போதைப்பொருள் இருந்ததாகவும் அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.இதற்கிடையில், சந்தேக நபர் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.இதன்போது முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளின் போது சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில்  நேற்றையதினம் வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பொலிஸார் மீட்டனர்.இச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement