மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் கொழும்பு- கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ( 16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்கிசையில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு; இரு பெண்கள் கைது. மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் கொழும்பு- கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ( 16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கல்கிசை மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.