• Nov 23 2024

அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட 1690 துப்பாக்கிகள் - பொலிஸார் எடுத்த நடவடிக்கை

Chithra / Oct 11th 2024, 8:38 am
image

 

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட 1690 ஆயுதங்களில் 30 ஆயுதங்கள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வருடங்களில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களால் பெறப்பட்ட துப்பாக்கிகளில் 30 துப்பாக்கிகள் மட்டுமே நேற்று வரையில் வெலிசர கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம், இந்த ஆயுதங்கள் கையளிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தானியங்கி துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் 1,690 துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கி உரிமங்களை பெறுவதற்கு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் அறிக்கைகளை பெற்றுள்ளனர்.

 பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட 1690 துப்பாக்கிகள் - பொலிஸார் எடுத்த நடவடிக்கை  தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட 1690 ஆயுதங்களில் 30 ஆயுதங்கள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.கடந்த சில வருடங்களில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களால் பெறப்பட்ட துப்பாக்கிகளில் 30 துப்பாக்கிகள் மட்டுமே நேற்று வரையில் வெலிசர கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.இந்த உத்தரவின் பிரகாரம், இந்த ஆயுதங்கள் கையளிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தானியங்கி துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.கடந்த சில ஆண்டுகளில் 1,690 துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த துப்பாக்கி உரிமங்களை பெறுவதற்கு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் அறிக்கைகளை பெற்றுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement