• Oct 05 2024

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்..!! samugammedia

Tamil nila / Jan 31st 2024, 10:35 pm
image

Advertisement

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,,

குறித்த முறைப்பாட்டில், தான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் வந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என்னை நில்லடா என கூறினார்.

எனக்கு அன்று காய்ச்சல்  மெதுவாகவே சைக்கிள் பயணித்தேன் அவர் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை.

மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறுத்தி இறங்கடா எனக் கூறினார் ஏன் என கேட்டேன் என்னை முகத்தைப் பொத்தி அடித்தார்கள்.

ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை என கேட்டார்கள். காய்ச்சல் காரணமாக வரவில்லை என்றேன் மீண்டும் என்னை தாக்கினார்கள்.

நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னை தாறுமாறாக தாக்கி இரு பொலிசார் சேர்ந்து அருகில் இருந்த மதிலுடன்  என்னை வீசி விட்டுச் சென்றார்கள்.

வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன் எனது  ஒரு கால் முறிந்துள்ளது என்னை தாக்கிய போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.


இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார். samugammedia வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,,குறித்த முறைப்பாட்டில், தான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் வந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என்னை நில்லடா என கூறினார்.எனக்கு அன்று காய்ச்சல்  மெதுவாகவே சைக்கிள் பயணித்தேன் அவர் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை.மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறுத்தி இறங்கடா எனக் கூறினார் ஏன் என கேட்டேன் என்னை முகத்தைப் பொத்தி அடித்தார்கள்.ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை என கேட்டார்கள். காய்ச்சல் காரணமாக வரவில்லை என்றேன் மீண்டும் என்னை தாக்கினார்கள்.நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னை தாறுமாறாக தாக்கி இரு பொலிசார் சேர்ந்து அருகில் இருந்த மதிலுடன்  என்னை வீசி விட்டுச் சென்றார்கள்.வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன் எனது  ஒரு கால் முறிந்துள்ளது என்னை தாக்கிய போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement