சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கில் மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிக்கப்போகும் அரசியல் தலைகள்: வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி பத்திர பட்டியல் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.வடக்கில் மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது.எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.