இஸ்ரேல் தொழில் வேலைத்திட்டத்தில் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் சில நபர்கள் பல்வேறு ஊழல் மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேநேரம் சில சமூக ஊடகங்கள் பொய் செய்திகளை பிரசாரம் செய்து அரசாங்கத்துக்கும் அரச அதிகாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன.
இந்த அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து, நாட்டை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியை ஒருபோதும் கைவிடப்போவதில்லை
இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் தொழில் வாய்ப்பு பெற்ற இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு விமான பட்டுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு பணியகத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
என்றாலும் இந்த விடயத்திலும் இன்னும் சில முரண்பாடான நிலைமைகள் இருந்து வருகின்றன. இஸ்ரேல் தொழில் வேலைத்திட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு மோசடிகள் பல இடம்பெற்றுள்ளன.
தகுதியற்ற நபர்களை அந்த தொழிலுக்கு அனுப்பியதன் காரணமாக அவர்கள் தொழில் நிலையங்களில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். அவர்களுக்கு பணி புரிவதற்கு அனுபவம் இல்லாமையால் இந்த முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.
இஸ்ரேல் தொழில் வேலைத்திட்டத்தில் ஊழல் மோசடி செய்த அரசியல்வாதிகள் - அம்பலமான தகவல் இஸ்ரேல் தொழில் வேலைத்திட்டத்தில் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் சில நபர்கள் பல்வேறு ஊழல் மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார். அதேநேரம் சில சமூக ஊடகங்கள் பொய் செய்திகளை பிரசாரம் செய்து அரசாங்கத்துக்கும் அரச அதிகாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன.இந்த அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து, நாட்டை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியை ஒருபோதும் கைவிடப்போவதில்லை இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் தொழில் வாய்ப்பு பெற்ற இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு விமான பட்டுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு பணியகத்தில் இடம்பெற்றது.அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். என்றாலும் இந்த விடயத்திலும் இன்னும் சில முரண்பாடான நிலைமைகள் இருந்து வருகின்றன. இஸ்ரேல் தொழில் வேலைத்திட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு மோசடிகள் பல இடம்பெற்றுள்ளன.தகுதியற்ற நபர்களை அந்த தொழிலுக்கு அனுப்பியதன் காரணமாக அவர்கள் தொழில் நிலையங்களில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். அவர்களுக்கு பணி புரிவதற்கு அனுபவம் இல்லாமையால் இந்த முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.