பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளையதினம்(05) யாழ் உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சிவகுமாரன் நினைவு தூபியில் இடம்பெறவுள்ளதாக சிவகுமார் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு சம்பந்தமான ஊடக சந்திப்பு அறக்கட்டளை உறுப்பினர் செந்தூரன் தலைமையில் நேற்று(03) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் மண்னுக்காக தன் உயிரை நீர்த்த பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளோம்.
சிவகுமாரன் நினைவு தூபியை மீள அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னின்று உழைத்தார்.
அவரது முயற்சியின் காரணமாக உரும்பிராய் பகுதியில் மீள் சிவகுமாரின் முழு நீளச்சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டது.
ஆகவே கட்சி பேதங்களை கடந்து குறித்த நிகழ்வில் அனைவரும் ஒன்று கூடுமாறு அறக்கட்டளை குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் இடம்பெறவுள்ள பொன்.சிவகுமாரின் ஐம்பதாவது நினைவு தினம். பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளையதினம்(05) யாழ் உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சிவகுமாரன் நினைவு தூபியில் இடம்பெறவுள்ளதாக சிவகுமார் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பு சம்பந்தமான ஊடக சந்திப்பு அறக்கட்டளை உறுப்பினர் செந்தூரன் தலைமையில் நேற்று(03) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் மண்னுக்காக தன் உயிரை நீர்த்த பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளோம். சிவகுமாரன் நினைவு தூபியை மீள அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னின்று உழைத்தார். அவரது முயற்சியின் காரணமாக உரும்பிராய் பகுதியில் மீள் சிவகுமாரின் முழு நீளச்சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டது.ஆகவே கட்சி பேதங்களை கடந்து குறித்த நிகழ்வில் அனைவரும் ஒன்று கூடுமாறு அறக்கட்டளை குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.