• Nov 26 2024

பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும்...! அருட்தந்தை மா.சத்திவேல்...!samugammedia

Sharmi / Jan 15th 2024, 1:12 pm
image

அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நிலத்தில் வியர்வை சிந்தி, இயற்கையோடு போராடி, சவால்களை சந்தித்து அடைந்த வெற்றிக்காக உழவர்கள் நடத்தும் உறவு பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் பண்பாட்டுத் திருவிழாவாகவும், உலகத்தமிழர்கள் புத்தாண்டு பிறப்பாகவும் விழாவெடுத்து மகிழும் இவ் வேளையில் விழாது விழிப்புடன் இருக்க அனைத்து விழா மக்களையும் வாழ்த்தி மகிழ்வோம்.

பரம்பரை பரம்பரையாக உழைத்து வாழ்ந்த நிலங்களை பறித்தும், கலாச்சார பண்பாட்டு அழிவுகளை தீவிர படுத்தியும்,  பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்து, அவர்களின் மாடுகளை கொலை செய்து பொருளாதார பாதிப்போடு அவர்களை அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும்.

200 வருட காலமாக உறவுவுகளை தாம் உருவாக்கிய தேசத்திற்கே உரமாக்கி உழைத்து வரும் மலையக மக்களை பூமியிலிருந்து அகற்றும் செயற்பாடுகளை பேரினவாதிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆண்டாண்டு காலமாக பொங்கல் வைத்த நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. ஆனால் அவர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். வாழ்வே சொந்தமில்லாத மக்களுக்கு இது வாழ்வுரிமை பொங்கலாக எழுச்சி பொங்கலாக மலையகம் எங்கும் ஒலிக்க வேண்டும்.

மக்களின் விழாக்களை பறித்து தேசிய விழாவாக்கி மக்களை மயக்கும் அரசியல் நாடகமாடும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளோடு மேடையை பங்கு போடும் வேடத்தாரிகள் உழவர்களின் உரிமை காப்போம் என்றும் பண்பாடு வளர்ப்போம் என்பதும் நாடகமே.

தமிழர்களின் தாயக பூமியின் நிலத்துடனான கௌரவ வாழ்வை சிதைத்தவர்கள் மக்களின் காணிகளை அரசுடைமையாக்கி படையினரிடம் கையளிக்கவும், தமிழர்களின் பூர்வீக நிலத்தை தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்தாகவும், அடாத்தாக விகாரைகளை கட்டி மாற்றினத்தவர்கள குடியேற்றவும் அரசரப்பினர் எடுக்க முயற்சிகளை தடுப்பதற்கு உழைப்பின் மக்கள் நீதிப் போராட்டம் நடந்த சூழ்நிலையில் அவர்களை சிறையில் தள்ளுபவர்கள் பொங்கல் விழாவை தேசிய விழாவாக்குவது எவ்வாறு? பொங்கல் மக்களின் விழா. அது உரிமை விழா.அது மக்கள் விழாவாக தொடர வேண்டும்.

எங்கள் நிலத்தில் நாம் வியர்வை சிந்திய நிலத்தில் சுதந்திரமாக உரிமையோடு வாழ்வதற்கான அரசியல் தீர்வே எமக்கு வேண்டும் என கோரிக்கை எழுப்பி போராட்டம் நடப்பவர்களை சிறைக்குள் தள்ளி மகிழ்பவர்கள் நல்லூர் ஆலயத்தை விட பாரிய ஆலயம் கட்ட உதவுவோம் என மார்தட்டிக் கொண்டு தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்து பலவந்தமாக பௌத்த கலாச்சாரத்தை திணித்துக்கொண்டு சமய நல்லிணக்கம் பேசுவது ஏமாற்று அரசியல் சித்து விளையாட்டு. இத்தகைய அரசியலுக்கு கொடி பிடிப்பவர்கள் தமிழர்களின் பண்பாட்டு கொலை கொலையாளிகளே. இவர்களை தோற்கடிக்கும் உரிமை விழாவாக்க மக்கள் சபதமெடுக்க வேண்டும்.

பொங்கல் விழா என்பது தனி மனித கொண்டாட்டம் அல்ல. அது சமூக விழா, சமூக விழிப்பு விழா, உரிமை விழா,வாழ்வு விழா, அத்தோடு வியர்வை சிந்தி உழைத்த நிலம் பொங்கள் பொங்கும் நிலம் அதன் பூர்வீக மக்களுக்கே சொந்தமான என உரிமையோடு உலகிற்கு கூறும் மக்கள் அரசியல் பண்பாட்டுவிழா இவ்விழா மக்கள் விழாவாகவே தொடர வாழ்த்துவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும். அருட்தந்தை மா.சத்திவேல்.samugammedia அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்  அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,நிலத்தில் வியர்வை சிந்தி, இயற்கையோடு போராடி, சவால்களை சந்தித்து அடைந்த வெற்றிக்காக உழவர்கள் நடத்தும் உறவு பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் பண்பாட்டுத் திருவிழாவாகவும், உலகத்தமிழர்கள் புத்தாண்டு பிறப்பாகவும் விழாவெடுத்து மகிழும் இவ் வேளையில் விழாது விழிப்புடன் இருக்க அனைத்து விழா மக்களையும் வாழ்த்தி மகிழ்வோம்.பரம்பரை பரம்பரையாக உழைத்து வாழ்ந்த நிலங்களை பறித்தும், கலாச்சார பண்பாட்டு அழிவுகளை தீவிர படுத்தியும்,  பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்து, அவர்களின் மாடுகளை கொலை செய்து பொருளாதார பாதிப்போடு அவர்களை அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும்.200 வருட காலமாக உறவுவுகளை தாம் உருவாக்கிய தேசத்திற்கே உரமாக்கி உழைத்து வரும் மலையக மக்களை பூமியிலிருந்து அகற்றும் செயற்பாடுகளை பேரினவாதிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆண்டாண்டு காலமாக பொங்கல் வைத்த நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. ஆனால் அவர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். வாழ்வே சொந்தமில்லாத மக்களுக்கு இது வாழ்வுரிமை பொங்கலாக எழுச்சி பொங்கலாக மலையகம் எங்கும் ஒலிக்க வேண்டும்.மக்களின் விழாக்களை பறித்து தேசிய விழாவாக்கி மக்களை மயக்கும் அரசியல் நாடகமாடும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளோடு மேடையை பங்கு போடும் வேடத்தாரிகள் உழவர்களின் உரிமை காப்போம் என்றும் பண்பாடு வளர்ப்போம் என்பதும் நாடகமே.தமிழர்களின் தாயக பூமியின் நிலத்துடனான கௌரவ வாழ்வை சிதைத்தவர்கள் மக்களின் காணிகளை அரசுடைமையாக்கி படையினரிடம் கையளிக்கவும், தமிழர்களின் பூர்வீக நிலத்தை தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்தாகவும், அடாத்தாக விகாரைகளை கட்டி மாற்றினத்தவர்கள குடியேற்றவும் அரசரப்பினர் எடுக்க முயற்சிகளை தடுப்பதற்கு உழைப்பின் மக்கள் நீதிப் போராட்டம் நடந்த சூழ்நிலையில் அவர்களை சிறையில் தள்ளுபவர்கள் பொங்கல் விழாவை தேசிய விழாவாக்குவது எவ்வாறு பொங்கல் மக்களின் விழா. அது உரிமை விழா.அது மக்கள் விழாவாக தொடர வேண்டும்.எங்கள் நிலத்தில் நாம் வியர்வை சிந்திய நிலத்தில் சுதந்திரமாக உரிமையோடு வாழ்வதற்கான அரசியல் தீர்வே எமக்கு வேண்டும் என கோரிக்கை எழுப்பி போராட்டம் நடப்பவர்களை சிறைக்குள் தள்ளி மகிழ்பவர்கள் நல்லூர் ஆலயத்தை விட பாரிய ஆலயம் கட்ட உதவுவோம் என மார்தட்டிக் கொண்டு தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்து பலவந்தமாக பௌத்த கலாச்சாரத்தை திணித்துக்கொண்டு சமய நல்லிணக்கம் பேசுவது ஏமாற்று அரசியல் சித்து விளையாட்டு. இத்தகைய அரசியலுக்கு கொடி பிடிப்பவர்கள் தமிழர்களின் பண்பாட்டு கொலை கொலையாளிகளே. இவர்களை தோற்கடிக்கும் உரிமை விழாவாக்க மக்கள் சபதமெடுக்க வேண்டும்.பொங்கல் விழா என்பது தனி மனித கொண்டாட்டம் அல்ல. அது சமூக விழா, சமூக விழிப்பு விழா, உரிமை விழா,வாழ்வு விழா, அத்தோடு வியர்வை சிந்தி உழைத்த நிலம் பொங்கள் பொங்கும் நிலம் அதன் பூர்வீக மக்களுக்கே சொந்தமான என உரிமையோடு உலகிற்கு கூறும் மக்கள் அரசியல் பண்பாட்டுவிழா இவ்விழா மக்கள் விழாவாகவே தொடர வாழ்த்துவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement