பிரான்சில் நடைபெறும் G7 மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அசல் நகலில் நேரில் கையெழுத்திட்டுள்ளார்.
பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள உலகப் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் (Palace of Versailles) நேற்று இரவு (ஜூன் 17) இந்த அதிரடி இராஜதந்திர நகர்வு அரங்கேறியுள்ளது.
முன்னதாக இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் மட்டுமே இருதரப்பாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிபர் டிரம்ப் அசல் கையெழுத்துக்களைப் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்த அமைதி ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
முதலாவது உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 'வெர்சாய்ஸ் அமைதி ஒப்பந்தம்' (Treaty of Versailles) கையெழுத்தான அதே வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில், தற்போது மத்திய கிழக்கின் மெகா போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போர் முடிவுக்கு வந்ததா-ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப் பிரான்சில் நடைபெறும் G7 மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அசல் நகலில் நேரில் கையெழுத்திட்டுள்ளார். பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள உலகப் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் (Palace of Versailles) நேற்று இரவு (ஜூன் 17) இந்த அதிரடி இராஜதந்திர நகர்வு அரங்கேறியுள்ளது.முன்னதாக இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் மட்டுமே இருதரப்பாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிபர் டிரம்ப் அசல் கையெழுத்துக்களைப் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்த அமைதி ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.முதலாவது உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 'வெர்சாய்ஸ் அமைதி ஒப்பந்தம்' (Treaty of Versailles) கையெழுத்தான அதே வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில், தற்போது மத்திய கிழக்கின் மெகா போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.