உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்றய தினம் இயற்கை எய்தியுள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த முதல் பாப்பராகவும் ஜெசுவிட் சமயத்தினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக்காலத்தில் சமூக நலன், சுற்றுச்சூழல், குடியுரிமை மற்றும் சமத்துவம் குறித்து பல முறை வலியுறுத்தியுள்ளார்.
பாப்பரசரின் மறைவு உலகின் கத்தோலிக்க சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார் உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்றய தினம் இயற்கை எய்தியுள்ளார். சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார். இந்த நிலையில் நேற்று வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.2013 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த முதல் பாப்பராகவும் ஜெசுவிட் சமயத்தினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக்காலத்தில் சமூக நலன், சுற்றுச்சூழல், குடியுரிமை மற்றும் சமத்துவம் குறித்து பல முறை வலியுறுத்தியுள்ளார்.பாப்பரசரின் மறைவு உலகின் கத்தோலிக்க சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.