• Nov 26 2024

மட்டக்களப்பில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு..!

Sharmi / Sep 4th 2024, 3:53 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம்(04)  தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

பட்டிருப்பு ,கல்குடா ,மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான தபால்மூல வாக்களிக்கும் பணிகள் காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும் , மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் பிரதான பொலிஸ் நிலையங்களிலும இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு தற்போது மிகவும் சுமுகமாக நடைபெற்றது.

உதவி தெரிவத்தாட்சி அலுவலர் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு பொலிஸ் நிலையங்;களில் இடம்பெற்று வருவதுடன்

பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பு செயற்பாட்டில் பொலிஸ் உத்தியோகள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புகளை இட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.


மட்டக்களப்பில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம்(04)  தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.பட்டிருப்பு ,கல்குடா ,மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான தபால்மூல வாக்களிக்கும் பணிகள் காலை முதல் நடைபெற்றுவருகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும் , மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் பிரதான பொலிஸ் நிலையங்களிலும இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு தற்போது மிகவும் சுமுகமாக நடைபெற்றது.உதவி தெரிவத்தாட்சி அலுவலர் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு பொலிஸ் நிலையங்;களில் இடம்பெற்று வருவதுடன்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.தபால் மூல வாக்களிப்பு செயற்பாட்டில் பொலிஸ் உத்தியோகள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புகளை இட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement