• Dec 09 2024

ஹட்டனில் இ.போ.ச பேருந்துகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்...! வெளியான காரணம்...!

Sharmi / Jul 15th 2024, 12:07 pm
image

சில அதிகாரிகள் செய்து வரும் பல்வேறு தவறான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பொது போக்குவரத்து ஊழியர் சங்கம் சுவரொட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த சுவரொட்டி தொடர்பில் ஹட்டன் அரச பேருந்து டிப்போவில் கடமையாற்றும் நடத்துநர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது சில உத்தியோகத்தர்கள், சில சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இலங்கை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும், உத்தியோகத்தர் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காது என்ற இந்த சுவரொட்டிகள் ஹட்டன் நகரின் அனைத்து இடங்களிலும் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹட்டனில் இ.போ.ச பேருந்துகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள். வெளியான காரணம். சில அதிகாரிகள் செய்து வரும் பல்வேறு தவறான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பொது போக்குவரத்து ஊழியர் சங்கம் சுவரொட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.குறித்த சுவரொட்டி தொடர்பில் ஹட்டன் அரச பேருந்து டிப்போவில் கடமையாற்றும் நடத்துநர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,தற்போது சில உத்தியோகத்தர்கள், சில சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இலங்கை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும், உத்தியோகத்தர் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காது என்ற இந்த சுவரொட்டிகள் ஹட்டன் நகரின் அனைத்து இடங்களிலும் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement