• May 17 2024

Sharmi / Jan 1st 2023, 8:38 pm
image

Advertisement

கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அண்மைய நாட்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களிடையே பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு விசேட சந்தர்ப்பத்தை வழங்கியமையினால், அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால் அது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அண்மைய நாட்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களிடையே பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு விசேட சந்தர்ப்பத்தை வழங்கியமையினால், அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால் அது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement