• May 09 2024

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக உரிமை மீறலாகும்! - ஐக்கிய காங்கிரஸ் கட்சி SamugamMedia

Chithra / Feb 26th 2023, 12:17 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தாமல் இருப்ப‌து ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌லாகும் என‌ ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள‌து. 

கட்சியின்  கொள்கை பரப்புச் செயலாளரும், புத்தளம் மாவட்ட பொறுப்பாளருமான மெலளவி ஸப்வான் சல்மான் இதனை தெரிவித்தார்.

புத்த‌ள‌ம் - உளுக்காப்பள்ளத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (25) ந‌டைபெற்ற‌ க‌ட்சியின் ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்து தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்ட பின் திடீர் என காலவரையின்றி, காரணமின்றி தேர்தலை தாமதப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை க‌வ‌லையான‌து.

இதேவேளை தேர்தலுக்கான திகதி ஒன்றை மார்ச் 03 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் அறிவிக்கவுள்ளதாக மீண்டும் ஒரு தகவலை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையில் தேர்தல் நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை என்றும் தேர்தலை நடாத்த  பொருளாதார வசதி நாட்டு அரசாங்கத்திடம் இல்லை என்ற  குறைபாடுகளை ஜனாதிபதி தரப்பு சொல்லி வருகின்றது. இந்த நிலையில் சர்வதே நாடுகள் இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்ப‌தை நாம் உண‌ர‌ வேண்டும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்காக கட்சிகள் எல்லாம் தங்களுடைய பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருக்கின்ற நேரத்தில் தேர்தலை ஒத்தி வைப்பது, தடுத்து நிறுத்துவது என்பது ஒரு ஜனநாயக விரோத செயலாகும். 

தேர்தலுக்கு அச்சிடிடுவதற்கு பேப்பர் இல்லை, நிதி கிடைக்கவில்லை என பல குறைபாடுகளை தேர்தல் ஆணையகம் சொல்லுகின்றது.

எனவே இந்த குறைபாடுளை நீக்கி ஜனநாய ரீதியாக தேர்த‌ல் ந‌ட‌த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தனியாக போட்டியிடுகின்றோம். 

ஒரு ஜனநாயக கட்சியைப் பொறுத்த வரை தேர்தலை சந்திப்பதற்கு ஒரு போதும் தயங்குவதும் இல்லை பின்வாங்குதும் இல்லை, தேர்தல் ஒன்றை சந்தித்து எங்களுடைய ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்ள லேண்டும். 

அந்த வகையில் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்கிறோம்.

எங்களைப் பொறுத்த வரை தேர்தலை  நடாத்துவ‌தால் அரசாங்கத்திற்கு எந்த வித  பாதிப்பும் வரப் போவதில்லை. அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் தான் இந்த தேர்தல் நடக்கப் போகின்றது. 

சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இருக்க கூடிய அந்த ஒரு குறைபாடு இலங்கை வங்கோரத்து நிலையை  அடைந்து செல்கின்றது என்ற தவறான கண்ணோட்டம் சர்வதேச ரீதியில் நிவர்த்தி செய்யப்படும்.

எம‌து க‌ட்சி அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் செய்ய‌வில்லை. அரசாங்கம் என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகளின் போது ஆதரிப்ப‌தை ஆத‌ரிக்கிறோம், எதிர்ப்ப‌தை எதிர்ப்போம் என‌ தெரிவித்தார்.


தேர்தலை பிற்போடுவது ஜனநாயக உரிமை மீறலாகும் - ஐக்கிய காங்கிரஸ் கட்சி SamugamMedia உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தாமல் இருப்ப‌து ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌லாகும் என‌ ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள‌து. கட்சியின்  கொள்கை பரப்புச் செயலாளரும், புத்தளம் மாவட்ட பொறுப்பாளருமான மெலளவி ஸப்வான் சல்மான் இதனை தெரிவித்தார்.புத்த‌ள‌ம் - உளுக்காப்பள்ளத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (25) ந‌டைபெற்ற‌ க‌ட்சியின் ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்து தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்ட பின் திடீர் என காலவரையின்றி, காரணமின்றி தேர்தலை தாமதப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை க‌வ‌லையான‌து.இதேவேளை தேர்தலுக்கான திகதி ஒன்றை மார்ச் 03 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் அறிவிக்கவுள்ளதாக மீண்டும் ஒரு தகவலை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை என்றும் தேர்தலை நடாத்த  பொருளாதார வசதி நாட்டு அரசாங்கத்திடம் இல்லை என்ற  குறைபாடுகளை ஜனாதிபதி தரப்பு சொல்லி வருகின்றது. இந்த நிலையில் சர்வதே நாடுகள் இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்ப‌தை நாம் உண‌ர‌ வேண்டும்.தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்காக கட்சிகள் எல்லாம் தங்களுடைய பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருக்கின்ற நேரத்தில் தேர்தலை ஒத்தி வைப்பது, தடுத்து நிறுத்துவது என்பது ஒரு ஜனநாயக விரோத செயலாகும். தேர்தலுக்கு அச்சிடிடுவதற்கு பேப்பர் இல்லை, நிதி கிடைக்கவில்லை என பல குறைபாடுகளை தேர்தல் ஆணையகம் சொல்லுகின்றது.எனவே இந்த குறைபாடுளை நீக்கி ஜனநாய ரீதியாக தேர்த‌ல் ந‌ட‌த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.அத்துடன் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தனியாக போட்டியிடுகின்றோம். ஒரு ஜனநாயக கட்சியைப் பொறுத்த வரை தேர்தலை சந்திப்பதற்கு ஒரு போதும் தயங்குவதும் இல்லை பின்வாங்குதும் இல்லை, தேர்தல் ஒன்றை சந்தித்து எங்களுடைய ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்ள லேண்டும். அந்த வகையில் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்கிறோம்.எங்களைப் பொறுத்த வரை தேர்தலை  நடாத்துவ‌தால் அரசாங்கத்திற்கு எந்த வித  பாதிப்பும் வரப் போவதில்லை. அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் தான் இந்த தேர்தல் நடக்கப் போகின்றது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இருக்க கூடிய அந்த ஒரு குறைபாடு இலங்கை வங்கோரத்து நிலையை  அடைந்து செல்கின்றது என்ற தவறான கண்ணோட்டம் சர்வதேச ரீதியில் நிவர்த்தி செய்யப்படும்.எம‌து க‌ட்சி அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் செய்ய‌வில்லை. அரசாங்கம் என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகளின் போது ஆதரிப்ப‌தை ஆத‌ரிக்கிறோம், எதிர்ப்ப‌தை எதிர்ப்போம் என‌ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement