• Feb 12 2025

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு! இன்று வெளியாகும் தீர்மானம்

Chithra / Feb 12th 2025, 11:45 am
image

 

நாட்டில் நாளையதினம் முதல் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும்  வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

இந்நிலையில்  தற்போது ஏற்பட்டு மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு இன்று வெளியாகும் தீர்மானம்  நாட்டில் நாளையதினம் முதல் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும்  வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நிலையில்  தற்போது ஏற்பட்டு மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement