• Nov 17 2024

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு - வெளியான அறிவிப்பு

Chithra / Jun 2nd 2024, 2:47 pm
image

 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன தெரிவித்தார்.

வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும் இடையிலான ரயில் சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று கடும் மழை தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு - வெளியான அறிவிப்பு  தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன தெரிவித்தார்.வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும் இடையிலான ரயில் சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று கடும் மழை தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement