• Nov 17 2024

கடும் காற்றுடன் பலத்த மழை - நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடை

Chithra / May 22nd 2024, 1:08 pm
image

 

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ச்சியான மழையும் பலத்த காற்றும் வீசுகிறது.

இதன் காரணமாக வலப்பனை பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் இரண்டு நாட்களாக வலப்பனை ரூபஹா, மற்றும் தெரிப்பெயே ஆகிய பிரதேசங்களில் வீதி ஓரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் மின்சார இணைப்பு வயர்கள் மீது சரிந்தும், முறிந்தும் வீழ்ந்து மின் கம்பங்களும் உடைந்துள்ள நிலையில் இப் பிரதேசத்திற்கான மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

கடும் காற்றுடன் பலத்த மழை - நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடை  நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இந் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ச்சியான மழையும் பலத்த காற்றும் வீசுகிறது.இதன் காரணமாக வலப்பனை பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் இரண்டு நாட்களாக வலப்பனை ரூபஹா, மற்றும் தெரிப்பெயே ஆகிய பிரதேசங்களில் வீதி ஓரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் மின்சார இணைப்பு வயர்கள் மீது சரிந்தும், முறிந்தும் வீழ்ந்து மின் கம்பங்களும் உடைந்துள்ள நிலையில் இப் பிரதேசத்திற்கான மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement