• Sep 21 2024

நிபந்தனையுடன் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி! SamugamMedia

Chithra / Feb 21st 2023, 3:14 pm
image

Advertisement

அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள, திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளிப்பதற்கு அமைச்சரவைஅங்கீகாரம் அளித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2023 நிதியாண்டுக்கான 4,979 பில்லியன் ரூபாய்களை விஞ்சாத கடன் பெறுகைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடன் பெறுகைக்கான எல்லை நிதியாண்டில் கடன்களை மீளச் செலுத்தல், வட்டி செலுத்தல் மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள் மீள மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிதியாண்டுக்கான மொத்தக் கடன் பெறுகைகளை 4,979 பில்லியன் ரூபாய்கள் விஞ்சாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதன்படி உள்ளூர் மூலங்களிலிருந்து 3, 526 பில்லியன் ரூபாய்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து 1,453 பில்லியன் ரூபாய்களையும் பெற்றுக் கொள்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய கடன் 709 மில்லியன் டொலர்கள் இலங்கை அபிவிருத்தி பிணையக் கடன் மற்றும் அதற்கான வட்டியாக 46 மில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றது.

அதற்கமைய, அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாருக்கு அதிகாரமளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிபந்தனையுடன் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி SamugamMedia அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள, திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளிப்பதற்கு அமைச்சரவைஅங்கீகாரம் அளித்துள்ளது.2022ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2023 நிதியாண்டுக்கான 4,979 பில்லியன் ரூபாய்களை விஞ்சாத கடன் பெறுகைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.குறித்த கடன் பெறுகைக்கான எல்லை நிதியாண்டில் கடன்களை மீளச் செலுத்தல், வட்டி செலுத்தல் மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள் மீள மேற்கொள்ளப்பட வேண்டும்.நிதியாண்டுக்கான மொத்தக் கடன் பெறுகைகளை 4,979 பில்லியன் ரூபாய்கள் விஞ்சாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன்படி உள்ளூர் மூலங்களிலிருந்து 3, 526 பில்லியன் ரூபாய்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து 1,453 பில்லியன் ரூபாய்களையும் பெற்றுக் கொள்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய கடன் 709 மில்லியன் டொலர்கள் இலங்கை அபிவிருத்தி பிணையக் கடன் மற்றும் அதற்கான வட்டியாக 46 மில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றது.அதற்கமைய, அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாருக்கு அதிகாரமளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement