சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள உணவகமொன்றில் யூரோ 2024 இறுதிப் போட்டியைக் காண கால்பந்து ரசிகர்களால் நிரம்பியிருந்தபகுதியில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குண்டுவெடிப்பில் அங்கு நின்றிருந்த 10 கார்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கிருந்த பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோமாலியாவில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடிப்பு. ஐவர் மரணம்- 20 பேர் காயம் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள உணவகமொன்றில் யூரோ 2024 இறுதிப் போட்டியைக் காண கால்பந்து ரசிகர்களால் நிரம்பியிருந்தபகுதியில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை, குண்டுவெடிப்பில் அங்கு நின்றிருந்த 10 கார்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.குறிப்பாக, வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கிருந்த பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை,இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.