• Nov 26 2024

தோல்வியை உணர்ந்திருந்த பிரபாகரன்! வழி இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்! - சவேந்திர சில்வா

Chithra / May 19th 2024, 2:46 pm
image

 

போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன்  நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம். 

ஆனால் விடுதலைப் புலிகளின தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.

58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம்.

ஆனால் இறுதிக் கட்ட போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது. ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பனவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.என்றார்.

தோல்வியை உணர்ந்திருந்த பிரபாகரன் வழி இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம் - சவேந்திர சில்வா  போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன்  நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இறுதிக்கட்ட போரில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளின தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம்.ஆனால் இறுதிக் கட்ட போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது. ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பனவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement