நேற்றையதினம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இச் செயலமர்வு நுவரெலியா எலப்பையின் விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
செயலமர்வினை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் முகாமையாளர் திருமதி இரேஷா உதேனி மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் திருமதி ஆயிஷா ஜயவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.கே.ஏ.எல்.எஸ்.களுகம்பிட்டிய அவர்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறிப்பாக சுனாமி,தித்வா, புயலின் தாக்கம்,வெள்ள பெருக்கு மண் சரிவு போன்ற வற்றில் ஏற்பட்ட உயிர், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
அவ்வாறான நிலையில் இருந்து முன் கூட்டியே நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களையும் அவர்களின் உடமைகளை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அனர்த்தம் வரும் முன் முக்கியமான ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அந்த ஆவணங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்த அளவு அனர்த்தம் அற்ற பகுதிக்கு விரைந்து செல்ல வேண்டும்.
அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அந்த பகுதிக்கு பார்வை இட செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் எதிர் காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு வெள்ள பெருக்கு பூமி தாழ் இரக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மத தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கலாக ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராகுங்கள் நுவரெலியா மக்களுக்கு விசேட எச்சரிக்கை நேற்றையதினம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இச் செயலமர்வு நுவரெலியா எலப்பையின் விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.செயலமர்வினை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் முகாமையாளர் திருமதி இரேஷா உதேனி மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் திருமதி ஆயிஷா ஜயவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.கே.ஏ.எல்.எஸ்.களுகம்பிட்டிய அவர்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறிப்பாக சுனாமி,தித்வா, புயலின் தாக்கம்,வெள்ள பெருக்கு மண் சரிவு போன்ற வற்றில் ஏற்பட்ட உயிர், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.அவ்வாறான நிலையில் இருந்து முன் கூட்டியே நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களையும் அவர்களின் உடமைகளை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.அனர்த்தம் வரும் முன் முக்கியமான ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அந்த ஆவணங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்த அளவு அனர்த்தம் அற்ற பகுதிக்கு விரைந்து செல்ல வேண்டும்.அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அந்த பகுதிக்கு பார்வை இட செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் எதிர் காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு வெள்ள பெருக்கு பூமி தாழ் இரக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்வில் மத தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கலாக ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.