முல்லைத்தீவு முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம்(14) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து குறைந்த ஊதியத்துடன் சேவையாற்றுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினர் இதன்போது கோரிக்கையும் முன்வைத்தனர்.
அத்தோடு நீண்டகாலமாக பல இன்னல்களுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிவரும் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டது.
இந் நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி ஆசிரியர்கள்- ரவிகரன் எம்.பி முல்லையில் சந்திப்பு. முல்லைத்தீவு முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம்(14) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து குறைந்த ஊதியத்துடன் சேவையாற்றுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினர் இதன்போது கோரிக்கையும் முன்வைத்தனர். அத்தோடு நீண்டகாலமாக பல இன்னல்களுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிவரும் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.